தேசிய செய்திகள்

கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி + "||" + First vaccine dose given to over 90 percent of eligible persons in Kerala: Health Minister

கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம், 

கேரளாவில் மற்ற மாநிலங்களைவிட கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. இது ஒருபுறம் இருக்க அங்கு தடுப்பூசி போடும்பணியும் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு முதல்தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறி உள்ளார்.

நேற்று நிருபர்களை சந்தித்த அவர், “கேரளாவில் கொரோனா அறியப்படுபவர்களில் 75 சதவீதம் பேர் அறிகுறி அற்றவர்களாக இருப்பதால் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் கொரோனா விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களே மரணத்தை தழுவுகிறார்கள். எனவே யாரும் 2 தவணை தடுப்பூசி போட தயங்கக்கூடாது. அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் தகுதி படைத்த 90 சதவீதம் பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக 5 மாவட்டங்களில் சுமார் 100 சதவீதம் பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மழை: பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைப்பு - மந்திரி சிவன் குட்டி தகவல்
கேரளாவில் பலத்த மழை காரணமாக பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மந்திரி சிவன் குட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் கனமழை-நிலச்சரிவுக்கு காரணம் என்ன?: நிபுணர்கள் விளக்கம்
கேரளாவை உலுக்கியுள்ள கனமழை-நிலச்சரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
3. கேரளாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,555 பேருக்கு தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை!
கேரளாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: அமித்ஷா உறுதி
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.