உலக செய்திகள்

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி + "||" + UK begins Covid-19 vaccine rollout for school children aged 12-15

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டன், 

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு 74 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வரும் அதேவேளையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அந்த நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்தலாம் என சுகாதார நிபுணர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது
இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக ஒரேநாளில் 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 49,139 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை
இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்து உடலை சாலையில் வீசிச்சென்ற இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 45,140 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,423 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.