தேசிய செய்திகள்

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு + "||" + PM Modi, French President Emmanuel Macron discuss Afghanistan crisis, co-operation in Indo-Pacific region

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.
புதுடெல்லி,

இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுன் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, போதைப்பொருள்,  பயங்கரவாதம்,  பெண்கள் உரிமை, சிறுபான்மையினர் பிரச்சினை குறித்த கவலை போன்றவை குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  அதேபோல் ஜி 20 மாநாடு போன்ற பல தரப்பு உச்சி மாநாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஆலோசனைகள் அப்படியே நீட்டிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர். கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் மீண்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்திய முடிவெடுத்திருப்பதை பிரான்ஸ் அதிபர் வரவேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ், 75 நகா்ப்புற வளா்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா்.
2. பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 2 பேர் பலி
பிரான்சில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
3. இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார்: ராகுல் காந்தி தாக்கு
இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
4. பிரான்சில் 70 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.