உலக செய்திகள்

தடுப்பூசிகள் ஏற்றுமதி: இந்தியாவின் முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு + "||" + Will go a long way': WHO chief scientist welcomes India's decision to resume COVID-19 vaccine exports

தடுப்பூசிகள் ஏற்றுமதி: இந்தியாவின் முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு

தடுப்பூசிகள் ஏற்றுமதி: இந்தியாவின் முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு
மீண்டும் தடுப்பூசி உற்பத்தி ஏற்றுமதி செய்யும் இந்திய அரசின் முடிவை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது.
ஜெனீவா, 

உபரியாக இருக்கும் தடுப்பூசிகள் அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உச்சத்துக்கு வந்த சமயத்தில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. 

தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும்  தடுப்பூசி உற்பத்தியும் அதிகரித்துள்ளதாலும், இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்ட்வியா நேற்று தெரிவித்தார். 

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் செளமியா சுவாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், " தடுப்பூசி ஏற்றுமதி அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது. உலகளாவிய தடுப்பூசி வழங்கலில் சமநிலையை அடைய இது உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு
இந்தியா வரும் சர்வதேச பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: அமித்ஷா உறுதி
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் எழுச்சி பெறாமல் இருக்க வழிகாட்டும் நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவதுடன், தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் கூட்ட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
4. முல்லைப்பெரியாறு அணை வழக்கில் அறிக்கை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்
முல்லைப்பெரியாறு அணை வழக்கில் உத்தரவிட்டபடி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்துள்ளது.
5. வருகிற 15-ந் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: மத்திய அரசு
தனி விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை 15-ந் தேதி முதல் இந்தியா வர அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.