தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிப்பு + "||" + State Assembly elections: Puducherry BJP candidate ex-MLA Selvaganapathy Announcement

மாநிலங்களவை தேர்தல்: புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தல்: புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிப்பு
புதுச்சேரி பா.ஜனதா பொருளாளராக உள்ள செல்வகணபதி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்
புதுச்சேரி, 

புதுச்சேரியில் தற்போது என்ஆர் காங்கிரஸ் - பாஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு நியமன எம்எல்ஏக்களை சேர்த்து 9 பேரும் உள்ளனர்.

இந்த சூழலில் புதுவையில் இருக்கும் ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு நாளை நிறைவடைகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசும், பாஜகவுக்கு இடையில் மாநிலங்களவை எம்.பியை பெறுவதில் போட்டி நிலவியது. இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே வேட்பாளரைத் தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பா.ஜனதாவின் செல்வகணபதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்படி புதுச்சேரி பா.ஜனதா பொருளாளராக உள்ள செல்வகணபதி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
2. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3. மாநிலங்களவை திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிப்பு
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.