மாநில செய்திகள்

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை + "||" + Heavy rains in Chennai through night

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அதிலும் குறிப்பாக எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, தி-நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், பாலவாக்கம், ராயப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேலும் சென்னையில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 100-ரூபாயை நெருங்கியது டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
2. சென்னையில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் நாளை (சனிக்கிழமை) 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், தற்போது 4.61 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
3. கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை!
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
5. நேபாளத்தில் இடைவிடாது கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 77 பேர் பலி
நேபாளத்தில் இடைவிடாது கனமழை கொட்டி வரும் நிலையில் அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 77 பேர் பலியாகினர்.