தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 83.33 கோடியாக உயர்வு: மத்திய அரசு + "||" + India’s cumulative vaccination coverage crosses 83-crore mark

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 83.33 கோடியாக உயர்வு: மத்திய அரசு

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 83.33 கோடியாக உயர்வு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 83.33 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 83.33 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 64,98,274 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று மாலை 7 மணிவரை மொத்தம் 83,33,46,676 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதன்படி 18 முதல் 44 வயது வரையில் உள்ளவர்கள் - முதல் தவணை - 33,74,76,070, இரண்டாம் தவணை - 6,67,81,067

45 முதல் 59 வயது வரையில் உள்ளவர்கள்: முதல் தவணை - 15,36,39,648,  இரண்டாம் தவணை - 7,14,56,603

60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்: முதல் தவணை -  9,82,67,915,   இரண்டாம் தவணை - 5,35,57,724

சுகாதாரத்துறையில் உள்ளவர்கள்: முதல் தவணை - 1,03,70,167,   இரண்டாம் தவணை - 87,83,665

முன்களப் பணியாளர்கள்: முதல் தவணை - 1,83,47,221,  இரண்டாம் தவணை - 1,46,66,596.

தொடர்புடைய செய்திகள்

1. புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
2. கேரளாவில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது - கேரள சுகாதாரத்துறை மந்திரி
கேரளாவில் இதுவரை 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
3. புனேவில் இருந்து 11½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
4. நாட்டில் இதுவரை 56.89 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் தகவல்
இந்தியாவில் இதுவரை 56.89 கோடிக்கும் அதிகமான கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
5. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்வு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 86.01 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.