தேசிய செய்திகள்

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 26 பேர் கைது + "||" + Maharashtra Dombivali rape case: 26 held for gang rape of 15-year-old girl; search for three accused underway

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 26 பேர் கைது

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 26 பேர் கைது
15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் டொம்பிவ்லி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது ஆண் நண்பன் கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த சம்பவத்தை அந்த ஆண் நண்பன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளான். அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளான்.

இதனை தொடர்ந்து அந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்த ஆணின் நண்பர்கள் அந்த சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சிறுமியை 29 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். டொம்பிவ்லி, பெட்லாப்பூர், ரபலி, மூர்பாத் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று அந்த சிறுமியை  பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உள்பட 26 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி கல்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு!
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. திரையரங்குகளை மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவு
அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன்மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளது.
4. மராட்டியத்தில் இன்று 2,943 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
மராட்டியத்தில் இன்று மேலும் 2,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தில் இன்று புதிதாக 2,681 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 2,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.