தேசிய செய்திகள்

66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு + "||" + 66 percentage of the 18+ population has received at least one dose of Coronavirus vaccine says Health Ministry

66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு

66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

கடந்த 21 மணிநேரத்தில் 31 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலனவை கேரளா மற்றும் மராட்டியத்தில் பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 62.73 சதவிகிதம் கேரளாவில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து 12-வது வாரமாக நாட்டில் கொரோனா பரவல் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவும், குணமடைந்தோர் அளவு 97.8 சதவிகிதம் உள்ளது.

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேட்பட்ட 23 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தப்பட்டுள்ளது. 

இமாசல பிரதேசம், சிக்கிம், லட்சத்தீவு, சண்டிகார், கோவா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது

தாதர் மற்றும் நாகர் ஹவேலி, கேரளா, லடாக், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 90% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு - அமெரிக்க ஆய்வு முடிவு
கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என அமெரிக்க ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்டும் - மத்திய இணை மந்திரி
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விரைவில் 100 கோடி எண்ணிக்கையை எட்டும் என்று மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு
ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
4. மாநிலங்களுக்கு 100 கோடிகளுக்கு மேல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரையில் 100 கோடிகளுக்கு மேல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 96.43 கோடியாக உயர்வு
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 96.43 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.