தேசிய செய்திகள்

மராட்டியத்தில் பெண் போலீசாருக்கு பணி நேரம் குறைப்பு + "||" + Now Maharashtra female cops' duty time to be reduced to 8 hours from 12 hours

மராட்டியத்தில் பெண் போலீசாருக்கு பணி நேரம் குறைப்பு

மராட்டியத்தில் பெண் போலீசாருக்கு பணி நேரம் குறைப்பு
மராட்டியத்தில் பெண் போலீசாருக்கு பணி நேரம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் பெண் போலீசாருக்கு  பணிநேரம் குறைக்கப்படவுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் பாண்டே கூறியது:

மராட்டிய  மாநிலத்தில் பெண் போலீசாரின் பணிநேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார். 

மேலும், மாற்றப்பட்ட பணிநேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே அறிவிப்பால் பெண் போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.