மாநில செய்திகள்

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் - அமைச்சர், கனிமொழி எம்.பி மரியாதை + "||" + Sivanthi Aditanar Birthday Minister, MP Kanimozhi Respect

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் - அமைச்சர், கனிமொழி எம்.பி மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் - அமைச்சர், கனிமொழி எம்.பி மரியாதை
பா.சிவந்தி ஆதித்தனார் 86-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை

பா.சிவந்தி ஆதித்தனார் 86-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. 

பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் இமாலய முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது 86-வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 24-ந்தேதியான இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு  கலெக்டர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மகளிர் அணி அமைப்பாளருமான கனிமொழி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.