உலக செய்திகள்

ரஷியா: கொள்ளை முயற்சியை தடுத்த 70 வயது மூதாட்டி + "||" + Russian grandma overpowers robber

ரஷியா: கொள்ளை முயற்சியை தடுத்த 70 வயது மூதாட்டி

ரஷியா: கொள்ளை முயற்சியை தடுத்த 70 வயது மூதாட்டி
ரஷியாவில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 70 வயது மூதாட்டியிடம் இருந்து பையை கொள்ளையடிக்க திருடன் முயற்சித்துள்ளான்.
மாஸ்கோ,

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் ஒஸ்டஹன்ஹா நகரில் நேற்று முன் தினம் இரவு 70 வயது நிரம்பிய மூதாட்டி தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 22 வயது நிரம்பிய இளைஞன் மூதாட்டி தனது கையில் வைத்திருந்த பையை பறித்து செல்ல முயற்சித்துள்ளான்.

திருடன் தனது பையை பறித்து செல்ல முயற்சித்ததை உணர்ந்த மூதாட்டி அந்த திருடனுடன் போராடியுள்ளார். இதில், அந்த திருடன் மூதாட்டியை சாலையில் தள்ளிவிட்டு பையை பறிக்க முயற்சித்துள்ளான். ஆனால், திருடனிடம் எதிர்த்து போராடிய மூதாட்டி சாலையில் விழுந்த போதும் சண்டையிட்டுள்ளார். சாலையில் மூதாட்டியை இழுத்து சென்ற திருடன் பையை பறிக்க முயற்சித்துள்ளான். ஆனால், மூதாட்டியின் எதிர்ப்பால் திருடனால் பையை திருட முடியவில்லை. 

அப்போது, சாலையில் மறுபுறம் வந்துகொண்டிருந்த ஒரு நபர் மூதாட்டியிடம் திருடன் திருட முயற்சிப்பதை கண்டுள்ளார். உடனடியாக அந்த நபர் திருடனை பிடிக்க முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து மூதாட்டியிடம் திருடும் முயற்சியை கைவிட்ட அந்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டியிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் துப்பாக்கி குண்டு தொழிற்சாலையில் வெடி விபத்து -16 பேர் பலி
ரஷியாவில் துப்பாக்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
2. ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை அமெரிக்கா பங்கேற்கவில்லை.
3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் விமான விபத்து; 16 பேர் பலி
ரஷ்யாவில் பாராசூட் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.
5. ரஷிய அதிபர் புதின் - துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கு அதிபர் தாயூப் எர்டோகன் சந்தித்தார்.