தேசிய செய்திகள்

‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் + "||" + Tejashwi Yadav Writes To 33 Senior Non-BJP Politicians On Caste Census

‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்

‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி உள்ளார்.
பாட்னா, 

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. எனினும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்கக் கோரி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட, பா.ஜனதா இல்லாத 33 கட்சித் தலைவர்களுக்கு  பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவசர கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக, மாநில கட்சிகளை ஒன்றுதிரண்டும் வகையில் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய பா.ஜனதா அரசின் நிலைப்பாட்டை விமர்சித்தும், பா.ஜனதா அரசுக்கு எதிரான அவைரும் கைகோர்க்க வேண்டும் என்றும் அதில் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. கள் விற்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு
கள் விற்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு தடையை நீக்க தமிழக அரசுக்கு கோரிக்கை.
2. மெல்போனில், ஜோகோவிச்சுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆதரவு குரல் எழுப்பிய செர்பியா மக்கள்
செர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள், மெல்போர்னில் ஜோகோவிச் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலுக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
3. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4. சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நிதிஷ்குமார்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஜார்கண்ட் மாநில அனைத்து கட்சி குழு, அமித்ஷாவை சந்தித்து இதே கோரிக்கையை விடுத்தது.