மாநில செய்திகள்

போலீசாரின் அதிரடி சோதனை: 52 மணி நேரத்தில் 3,325 பேர் கைது! + "||" + Police raid: 3325 arrests in 52 hours

போலீசாரின் அதிரடி சோதனை: 52 மணி நேரத்தில் 3,325 பேர் கைது!

போலீசாரின் அதிரடி சோதனை: 52 மணி நேரத்தில் 3,325 பேர் கைது!
'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, 

ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் 'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 52 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 பேர். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

மேலும் நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு 2526 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 நபர்கள் ஆவர். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 972 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு 2526 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் 7, கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் 1,110 என மொத்தம் 1,117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலைக் குற்றஙளில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்கு
சென்னையில் உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 55 கிளப்புகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
2. பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
3. விராலிமலை அருகே காலிமனை வாங்கியதில் மோசடி; 2 பேர் மீது வழக்கு
விராலிமலை அருகே காலிமனை வாங்கியதில் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. குடிபோதையில் தகராறு கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி
குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்ற அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
5. மாவோ பயங்கரவாதிகள் பயிற்சி தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை
மாவோ பயங்கரவாதிகள் தொடர்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.