மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of heavy rain in 7 districts: Meteorological Center information

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், ““குலாப்” புயல் இன்று  காலை 8.30 மணி நிலவரப்படி, கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதுமேலும் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கலிங்கப்பட்டினம் - கோபால்பூருக்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று (26-09-2021) தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

நாளை (27-09-2021) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (28.09.2021) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஈரோடு. கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29.09.2021, 30.09.2021 ஆகிய நாட்களில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கனமழையால் கட்டுக்குள் வந்த காற்று மாசு
டெல்லியில் நேற்று பெய்த கனமழையால் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
2. கேரளாவில் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது- இந்திய வானிலை ஆய்வு மையம்
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
3. கேரளாவில் மழை தொடர வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. கனமழை, வெள்ளம்: கேரளாவில் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27- ஆக உயர்ந்துள்ளது.
5. கேரளாவில் கனமழை-நிலச்சரிவுக்கு காரணம் என்ன?: நிபுணர்கள் விளக்கம்
கேரளாவை உலுக்கியுள்ள கனமழை-நிலச்சரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.