தேசிய செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நிதிஷ்குமார் + "||" + Caste based census should conduct survey: Bihar CM Nitish Kumar

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நிதிஷ்குமார்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நிதிஷ்குமார்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஜார்கண்ட் மாநில அனைத்து கட்சி குழு, அமித்ஷாவை சந்தித்து இதே கோரிக்கையை விடுத்தது.
சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதி விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், ஏற்கனவே பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தார்.இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “எஸ்.சி., எஸ்.டி.யை தவிர, இதர சாதிகளின் விவரங்களை சேகரிப்பது இல்லை என்று கொள்கை முடிவு எடுத்துள்ளோம்” என்று கூறப்பட்டு இருந்தது.இதனால், மீண்டும் இவ்விவகாரம் பலத்த விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

தேசநலனுக்கு உகந்தது
இந்தநிலையில், நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கூட்டினார். அதில் பங்கேற்பதற்காக நிதிஷ்குமார் டெல்லி சென்றார்.

டெல்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தேசநலனுக்கு உகந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு இது உதவும். வளர்ச்சியில் பின்தங்கிய சமூகத்தினரை மேம்படுத்த பயன்படும். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இதற்காக ஊழியர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து, கணக்கெடுப்பு நடத்தலாம். இந்த கோரிக்கை பீகார் மாநிலத்தில் இருந்து மட்டுமின்றி, பல மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளது. இப்பிரச்சினையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பல்வேறு கட்சியினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹேமந்த் சோரன்
இதற்கிடையே, ஜார்கண்ட் மாநில அனைத்து கட்சி குழு, அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தியது.மாநிலத்தின் உணர்வுகளை அமித்ஷாவிடம் எடுத்துக் கூறியதாக ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் தெரிவித்தார். இக்குழுவில், மாநில பா.ஜனதா தலைவர் தீபக் பிரகாசும் இடம் பெற்றிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2. சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3. ‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி உள்ளார்.
4. சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை: லாலு பிரசாத் யாதவ் உறுதி
சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை எனவும், இடஒதுக்கீட்டில் தேவைப்பட்டால் 50 சதவீதத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
5. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்ய குழு அமைத்தார் சோனியாகாந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கொண்ட குழுவை சோனியாகாந்தி நேற்று அமைத்தார்.