தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்வு: மத்திய அரசு + "||" + Covid-19 vaccination: India administers over 86 crore doses

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்வு: மத்திய அரசு

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்வு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 86.01 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 86.01 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று காலை 7 மணிவரை மொத்தம் 86,01,59,011 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதன்படி 18 முதல் 44 வயது வரையில் உள்ளவர்கள் - முதல் தவணை - 34,82,66,215, இரண்டாம் தவணை - 7,45,08,007

45 முதல் 59 வயது வரையில் உள்ளவர்கள்: முதல் தவணை - 15,64,81,731,  இரண்டாம் தவணை - 7,39,69,804

60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்: முதல் தவணை -  9,97,47,469,   இரண்டாம் தவணை - 5,47,95,828

சுகாதாரத்துறையில் உள்ளவர்கள்: முதல் தவணை - 1,03,71,418,   இரண்டாம் தவணை - 88,35,377

முன்களப் பணியாளர்கள்: முதல் தவணை - 1,83,49,453,  இரண்டாம் தவணை - 1,48,33,709.

தொடர்புடைய செய்திகள்

1. 100 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு- பிரதமர் மோடி நன்றி
இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று வரலாற்று சாதனை படைத்தது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
4. இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம்; 152 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா
இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் எடுத்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,623- பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.