உலக செய்திகள்

பிரான்சில் 70 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு! + "||" + Covid damage exceeds 70 million in France!

பிரான்சில் 70 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

பிரான்சில் 70 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்,

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 7-வது இடத்தில் நீடிக்கிறது. 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 70 லட்சத்து 2 ஆயிரத்து 393 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,16,615 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,50,301 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,35,477 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனிடையே பிரான்ஸ் நாட்டில், வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல், கொரோனா பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படாது என்றும், கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்து உள்ளார். சுகாதார பாஸ்போர்ட்டை பெற, தடுப்பூசி செலுத்தாத மக்கள் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும், கட்டணம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.17 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.63 கோடியாக உயர்ந்துள்ளது.
2. இங்கிலாந்து: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 31 பேர் பலி
அட்லாண்டிக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
3. தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சம்
பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சமீபத்தில் தான் அந்நாட்டு அரசு சமூக இடைவெளி விதிகளை தளர்த்தியது.
4. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டியது..!
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.