பக்ரைன் நாட்டில் இஸ்ரேல் தூதரகம் திறப்பு


பக்ரைன் நாட்டில் இஸ்ரேல் தூதரகம் திறப்பு
x
தினத்தந்தி 30 Sep 2021 9:37 PM GMT (Updated: 30 Sep 2021 9:37 PM GMT)

பக்ரைன் தலைநகர் மனாமாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமானம் சென்றது.

மனமா,

அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சித்தார். 

அதன்பயனாக அபிரகாம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் , பக்ரைன், சூடான், மொரோகோ ஆகிய நாடுகளுடன் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. இதனை தொடர்ந்து இந்த நாடுகளில் இஸ்ரேல் தூதர உறவை அமைத்து வருகிறது.

அந்த வகையில், பக்ரைன் நாட்டில் இஸ்ரேல் தூதரகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளுடனான ஒப்பந்தத்திற்கு பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி யர் லபிட் நேற்று அரசுமுறை பயணமாக பக்ரைன் சென்றார். அவரை பக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்பு அளித்தார். அதன்பின்னர் பக்ரைன் அரசர் முகமது பின் இசா அல் கஃபிலாவை இஸ்ரேலிய வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்தார். 

இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவை மேம்படுத்தும் விவதாம பக்ரைன் தலைநகர் மனாமாவில் இஸ்ரேல் தூதரம் திறக்கப்பட்டது. பக்ரைனில் இஸ்ரேல் தூதரகத்தை யர் லபிட் திறந்துவைத்தார். 

இருநாடுகளுக்கு இடையேயும் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதன் ஒரு பகுதியாக முதல்முறையாக பக்ரைன்-இஸ்ரேல் இடையே விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. பக்ரைன் தலைநகர் மனாமாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமானம் சென்றது.

இஸ்ரேல்-பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு இருநாடுகளுக்கும் இடையே விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிகழ்வு மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 

Next Story