கிரிக்கெட்

ஐபிஎல்: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சு தேர்வு + "||" + IPL: Delhi won the toss and elected to field

ஐபிஎல்: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல்: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சு தேர்வு
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றைய 50-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  ரிஷப் பாண்ட் முதலில்  பந்து வீச்சைத்  தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

புள்ளிப் பட்டியலில், ஒரே புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணி முதலாவது இடத்திலும் டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தை பெறும் என்ற நிலையில் சென்னை அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் டெல்லி அணி முதல் இடத்திற்கு முன்னேறுவதற்காகவும் விளையாடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக ரெய்னாவுக்கு பதிலாக உத்தப்பாவும், சாம் கரண், ஆஷிஃப்க்கு பதிலாக மீண்டும் தீபக், பிராவோவும் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்று மாசு - பொதுமக்கள் அவதி
டெல்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது.
2. டெல்லியில் மிக மோசமான நிலையில் நீடிக்கும் காற்று மாசு
டெல்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது.
3. சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...!!
சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
4. டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் காற்று மாசு; மிக மோசமான நிலையில் காற்றின் தரம்
டெல்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது.