மாநில செய்திகள்

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் + "||" + attack of the protesting peasants is highly condemnable - Chief Minister MK Stalin

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- 

“உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.

இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்!" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்: வேளாண் துறை மந்திரி
விவசாய சகோதரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, தங்கள் வழக்கமான பணியை தொடர வேண்டும் என நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தியுள்ளார்.
2. முடிவுக்கு வருகிறதா விவசாயிகள் போராட்டம்..? இன்று முக்கிய ஆலோசனை
ஓராண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை நிறைவு செய்யலாமா என்பது குறித்த முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படலாம் என தெரிகிறது.
3. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநில வாரியாக இழப்பீடு வேண்டும் - ராகேஷ் திகாய்த்
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநில வாரியாக இழப்பீடு வேண்டும் என்றும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.
4. கேரளாவுக்கு மீண்டும் பொது போக்குவரத்து அனுமதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5. போராட்டக்களத்தை விட்டு வெளியேறமாட்டோம் - விவசாய சங்க தலைவர்
குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் வரை போராட்டக்களத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என்று விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.