தேசிய செய்திகள்

சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு! + "||" + Siddaramaiah meets Sonia Gandhi, discusses assembly bypolls in Karnataka

சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!

சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!
கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக சோனியாகாந்தியை சந்தித்ததாக, சித்தராமையா தெரிவித்தார்.
புதுடெல்லி, 

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சித்தராமையா நேற்று டெல்லி சென்றார். அவருக்கு காங்கிரசில் தேசிய அளவில் பதவி அளிக்கப்படும் என்று யூகங்கள் எழுந்தன. சோனியாகாந்தியை சித்தராமையா சந்தித்து பேசினார். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘‘தேசிய அளவில் உங்களுக்கு பதவி அளிக்கப்பட உள்ளதா?’’ என்று கேட்கப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த சித்தராமையா, “அது தவறான தகவல். கர்நாடகாவில், வருகிற 30-ந் தேதி நடக்க உள்ள 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் கட்சி விவகாரங்கள் குறித்து சோனியாவுடன் பேசினேன். தேசிய அரசியல் பற்றி எதுவும் விவாதிக்கவில்லை. எனக்கு கர்நாடக அரசியலில்தான் ஆர்வம் உள்ளது. ராகுல்காந்தி எனக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்க முன்வந்தபோது கூட அதை மறுத்துவிட்டேன். காரிய கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன். கர்நாடக மாநில காங்கிரசை மாற்றி அமைப்பது பற்றி சோனியாவுடன் பேசவில்லை. பொதுச்செயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம் ஒரு பட்டியல் அளித்தேன். அதுபற்றி என்னுடன் பிறகு பேசுவதாக அவர் தெரிவித்தார்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீரென சந்தித்து பேசினார்.
2. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சந்தித்து பேசினார்.
3. விஜய்-சூர்யா திடீர் சந்திப்பு ...! என்ன பேசிக்கொண்டனர்...!
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் சமீபத்திய திடீர் சந்திப்பு தான் தற்போதைய முக்கிய செய்தியாக உள்ளது.
4. தலித் தலைவர்கள் பற்றி சித்தராமையா கீழ்தரமாக பேசுவாா் என எதிர்பார்க்கவில்லை: சி.டி.ரவி
சித்தராமையா தனது சமகால தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதாவுக்கு வந்த தலைவர்கள் அதிகாரத்திற்காக வரவில்லை என சி.டி.ரவி கூறியுள்ளார்.
5. “நண்பர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” - பிரதமர் மோடி
ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.