தேசிய செய்திகள்

லக்கிம்பூர் வன்முறை: அமைதியை குலைக்க முயற்சி என பிரியங்கா காந்தி மீது வழக்கு + "||" + Lakhimpur Kheri violence: Case against Priyanka, Hooda in Sitapur

லக்கிம்பூர் வன்முறை: அமைதியை குலைக்க முயற்சி என பிரியங்கா காந்தி மீது வழக்கு

லக்கிம்பூர் வன்முறை: அமைதியை குலைக்க முயற்சி என பிரியங்கா காந்தி மீது வழக்கு
அமைதியை குலைக்க முயற்சிக்கலாம் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது அரங்கேறிய வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், மேலும் சிலரும் சீதாப்பூரில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தீபேந்திர ஹூடா ஆகியோர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் அமைதியைக் குலைக்க முயற்சிக்கலாம் என்ற அச்சத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவுகள் 151, 107 மற்றும் 116-ன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சீதாப்பூர் உட்கோட்ட அதிகாரி பியாரே லால் மவுரியா கூறும்போது, “இதெல்லாம் முன் எச்சரிக்கை பிரிவுகள்தான். அவர்களால் அமைதி சீர்குலைக்கப்படாது என்ற வாக்குறுதி வந்தால், இந்தப் பிரிவுகள் நீக்கப்படும்” என தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெய் பீம் விவகாரம் - சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது வழக்கு
ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்கு
சென்னையில் உரிய விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 55 கிளப்புகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
3. ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் சட்டவிரோத கட்டுமானத்தை எதிர்த்து வளர்ப்பு மகள் வழக்கு
ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டுமானத்தை எதிர்த்து வளர்ப்பு மகள் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை மாநகராட்சி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. விபசார கும்பலிடம் லஞ்சம் வாங்கியதாக வழக்கு: 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை
விபசார கும்பலிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
5. பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் பரிசு
பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும், என்று என்.ஐ.ஏ. போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.