தேசிய செய்திகள்

ராமாயண டிவி சீரியல் நடிகர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல் + "||" + PM Modi condoles death of actors Ghanashyam Nayak, Arvind Trivedi

ராமாயண டிவி சீரியல் நடிகர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

ராமாயண டிவி சீரியல் நடிகர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
ராமாயண டிவி சீரியல் நடிகர் அரவிந்த் திரிவேதி மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

1987-88 வரை டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இந்தி டிவி சீரியல் நிகழ்ச்சியான ’ராமாயண்’ தொடரில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அரவிந்த் திரிவேதி. ராவணன் கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்த் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையில், 82 வயதான அரவிந்த் திரிவேதி இன்று மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், பிரபல இந்தி திரைப்பட மற்றும் டிவி சீரியல் நடிகரான கணேஷ்யாம் நாயக் தனது 77 வது வயதில் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார். 

இந்நிலையில், அரவிந்த் திரிவேதி மற்றும் கணேஷ்யாம் நாய்க் ஆகிய இரண்டு நடிகர்களின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கடந்த சில நாட்களில், தங்கள் திறமை மூலம் மக்களின் மனதை வென்ற இரண்டு திறமையான நடிகர்களை நாம் இழந்துள்ளோம். ’தரக் மஹ்டா கா அல்தோ கஷ்மா’ டிவி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம் கணேஷ்யாம் நாயக் நினைவுக்கொள்ளப்படுவார். அவர் மிகவும் கனிவும், தாழ்மையுடனும் இருந்தார். 

நாம் அரவிந்த் திரிவேதியை இழந்துள்ளோம். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் பொதுச்சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ராமாயண் தொடரில் நடித்ததற்காக அவர் பல தலைமுறை இந்தியர்களாலும் நினைவில் கொள்ளப்படுவார்.  இரு நடிகர்களின் குடும்பங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி’’ என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2. ஒமிக்ரான் அச்சுறுத்தல்: கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
3. மேற்கு வங்காளம்: சாலை விபத்தில் 18 பேர் பலி
கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே வந்த வாகனம் தெரியாததால், இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
4. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.
5. பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.