உலக செய்திகள்

முடங்கிய பேஸ்புக், கேலி செய்த டுவிட்டர் + "||" + The Twitter CEO who mocked the Facebook company

முடங்கிய பேஸ்புக், கேலி செய்த டுவிட்டர்

முடங்கிய பேஸ்புக், கேலி செய்த டுவிட்டர்
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதை கேலி செய்யும் விதமாக டுவிட்டர் நிறுவன சிஇஓ டுவிட் செய்தது இணையதளவாசிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா

நேற்று முன்தினம்  பேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் செயலிகள் ஏறக்குறைய 7 மணிநேரம் முடங்கியதால் சமூக வலைதளவாசிகள் டுவிட்டர், டெலிகிராம் நோக்கி மொத்தமாக படையெடுத்தனர்.

பேஸ்புக் டவுண், இன்ஸ்டாகிராம் டவுண் போன்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டு செய்து பேஸ்புக்கை கேலி செய்தனர் டுவிட்டர் பயனர்கள். டுவிட்டர் நிறுவனமும் டுவிட்டர் பக்கம் புதியதாக வந்தவர்களை குறிக்கும் விதமாக அனைவருக்கும் வணக்கம் என்று டுவிட் செய்தது.

இந்த நிலையில் பேஸ்புக் இணையதளம் விற்பனைக்கு என டுவிட் செய்யப்பட்ட படத்தை டுவிட்டர் சிஇஓ ஜேக் டார்சி பகிர்ந்து அதன் விலை எவ்வளவு என பதிவிட்டு கேலி செய்தார். இந்த பதிவை பலர் ஷேர் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி வன்முறை நடந்த சமயத்தில் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300% அதிகம் - அதிர்ச்சி தகவல்
டெல்லி வன்முறை நடத்த சமயத்தில் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300% அதிகமாக இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2. ‘பேஸ்புக்’ அளித்த தகவலால் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்
டெல்லியில் ரஜவுரி கார்டன் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். தனது தற்கொலையை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரடியாக காண்பிக்க முடிவு செய்தார்.
3. பேஸ்புக்கின் பெயர் மாறுகிறதா? - வெளியான தகவல்
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்படவுள்ளதாக ‘தி வேர்ஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
4. ஒரே வாரத்தில் இரண்டாவது முறை முடங்கியது ; மன்னிப்பு கோரிய பேஸ்புக்
பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை இந்த வாரத்தில் மீண்டும் முடங்கியதால் பேஸ்புக் நிர்வாகம் பயனர்களிடம் மன்னிப்புக் கோரியது.
5. இன்ஸ்டாகிராம் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவு
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி தொடங்கி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்தது.