உலக செய்திகள்

சீனாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை + "||" + No new corona infections after long days in China

சீனாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை

சீனாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை
சீனாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று புதிதாக கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த ஒரிரு மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்தன. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவில் புதிதாக கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சீனாவில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் நேற்று முன்தினம் 15 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனாவால் 4,636 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 96,284 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 621 பேர் பலி....!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சீனா கடும் ஆட்சேபம்
இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
4. ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது..!
ஜெர்மனியில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.
5. ஒடிசா: ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா
ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.