தேசிய செய்திகள்

விரைவில் இந்தியா-சீனா 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை...? முடிவுக்கு வருமா மோதல்...! + "||" + India, China 13th round corps commander talks to be held in next few days

விரைவில் இந்தியா-சீனா 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை...? முடிவுக்கு வருமா மோதல்...!

விரைவில் இந்தியா-சீனா  13ஆம் கட்ட பேச்சுவார்த்தை...? முடிவுக்கு வருமா மோதல்...!
இந்தியா-சீனா 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை மூன்று முதல் நான்கு நாள்களில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதத்திலிருந்து படை குவிக்கப்பட்டு பதற்றம் நீடித்துவந்தது. படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட படைத்தளபதிகள் தலைமையிலான ராணுவ ரீதியான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் கலந்து கொண்டது.

கடந்த பிப்ரவரியில் நடந்த 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளிலிருந்து இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டன. இதையடுத்து, பல மாதங்களாக நீடித்துவந்த பதற்றம் தணிந்தது.

இதையடுத்து, ஏப்ரல் 9ஆம் தேதி லடாக் எல்லையில் மீதமுள்ள படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள்  பங்கேற்ற 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், லேயை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் 14 வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமையிலான குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.

இச்சந்திப்பில் இந்திய சீன எல்லைப்பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்தும், கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களிலிருந்து படைகளை விலக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற 11 மற்றும் 12 கட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றன.

12 வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் சீனா கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கிடையேயான உராய்வு புள்ளிகளில் ஒன்றான ரோந்துப் புள்ளி 17ஏ லிருந்து படைகளை விலக்க ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய மற்றும் சீனப் படையினர் மோதலில் ஈடுபட்டனர்.இரு தரப்புக்கும் இடையே  கடந்த வாரம்  நேருக்கு நேர் மோதல் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

படைகள்  விலகுவதற்கு முன்பு சில மணிநேரங்கள் மோதல் நீடித்தது மற்றும் இந்திய படை வீரர்கள் அந்த இடத்தில் சீனர்களை விட அதிகமாக இருந்தனர். இருதரப்புக்கும் இடையில் நடந்த இந்த மோதலில் இந்திய பாதுகாப்பு படைக்கு எந்த சேதமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை மூன்று முதல் நான்கு நாள்களில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம், ராணுவ தளபதி முகுந்த் நரவனே அளித்த பேட்டியில், அக்டோபர் இரண்டாவது வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தை இழுபறி; ஒப்பந்தம் ஏற்படவில்லை
இந்தியா-சீனா இடையேயான நடந்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாகவும், எல்லை பிரச்சினை தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.