பிற விளையாட்டு

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி: நரிந்தர் பத்ரா + "||" + Attempt to host the 2036 Olympics in India: Indian Olympic Association President Narinder Bhadra

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி: நரிந்தர் பத்ரா

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி: நரிந்தர் பத்ரா
உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை. ஆனால் அதற்கான முயற்சி அவ்வப்போது நடப்பது உண்டு.
இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ) தலைவர் நரிந்தர் பத்ரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதற்கான உரிமத்தை பெறுவது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டோம். ஐ.ஓ.ஏ. தலைவர் என்ற முறையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் விவாதிக்கிறேன். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமம் எந்த நாட்டுக்கு வழங்கப்படும் என்பது இன்னும் 2-3 ஆண்டுகளில் இறுதி செய்யப்படும். இந்தியா உள்பட 6-7 நாடுகள் இதற்கான போட்டியில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால் தொடக்க விழாவை எங்கு நடத்துவீர்கள் என்று கேட்டால் நிச்சயம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி தான் கையை நீட்டுவேன். இந்தியாவில் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு இதை விட பொருத்தமான இடம் இருக்க முடியாது. தொடக்க விழா நடக்கும் ஸ்டேடியத்தில் தான் தடகள போட்டிகளும் நடைபெறும். அதற்கும் சரியான இடமாக இது இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.