மாநில செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை + "||" + Heavy rain at various places in Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னையில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தற்பொது சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், நந்தனம், ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர், ஆலந்தூர், தேனாம்பேட்டை, நங்கநல்லூர், ராயப்பேட்டை, வடபழனி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், அடையாறு, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக வேளச்சேரி, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நீலகிரி, சேலம், கோவை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான சென்னை தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2. ஐதராபாத்: கனமழையால் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றம்
ஐதராபாத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டது.
3. சென்னையில் ‘மத்திய சதுக்கம்’ கட்டுமானப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
4. பெங்களூருவில் கனமழை கொட்டித்தீர்த்தது
பெங்களூருவில் கனமழை கொட்டித்தீர்த்ததால், சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது. கால்வாயில் பசு மாடு அடித்து செல்லப்பட்டது. மெட்ரோ தூண் பகுதியில் குழி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
5. சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை!
சென்னை நகர் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.