உலக செய்திகள்

இலங்கையில் ரூ.2,657 க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை + "||" + Sri Lanka: Cooking gas cylinder cost goes through roof as govt ends price control for essential commodities

இலங்கையில் ரூ.2,657 க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை

இலங்கையில் ரூ.2,657 க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை
இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.
கொழும்பு,

இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், விலை அதிகரித்து 2,657 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது. அதேபோல ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் சமூக வலைதளங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.