கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி; பெங்களூரு அணி வெளியேற்றம் + "||" + Kolkatta Knight Riders won by 4 wickets.

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி; பெங்களூரு அணி வெளியேற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி; பெங்களூரு அணி வெளியேற்றம்
ஐ.பி.எல். தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சார்ஜா,

ஐ.பி.எல். தொடரில் இன்று  நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல்லும், கோலியும் களமிறங்கினர்.


பெங்களூரு அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. அதன்பின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியதால்  பெங்களூரு அணி 20  ஓவர்கள்  முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதனால் பவர்-பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்காமல் பந்துவீசினர். இதனால்  கொல்கத்தா அணி வீரர்கள் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். முக்கியமான கட்டங்களில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. எனினும் சுனில் நரைன் அதிரடியாக ஆடி கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 15 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. சகிப் அல் ஹாசன் கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எலிமினேட்டர் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் சார்ஜாவில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். தொடரை விட்டு வெளியேறியது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
2. போட்டியை முடித்து வைக்கவே எனக்கு சம்பளம் தருகிறார்கள்-ஹெட்மையர்
போட்டியை கடைசி வரை நின்று வெற்றிகரமாக முடித்து வைப்பதற்காகத் தான் நான் சம்பளம் வாங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்கு
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி!
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.