தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விற்பனையால் மக்கள் தலையில் ரூ.46 ஆயிரம் கோடி கடன் - சீதாராம் யெச்சூரி + "||" + Relentless loot of India's national assets: Sitaram Yechury on Air India sale

ஏர் இந்தியா விற்பனையால் மக்கள் தலையில் ரூ.46 ஆயிரம் கோடி கடன் - சீதாராம் யெச்சூரி

ஏர் இந்தியா விற்பனையால் மக்கள் தலையில் ரூ.46 ஆயிரம் கோடி கடன் - சீதாராம் யெச்சூரி
நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி அரசு அளிக்கும் இலவச பரிசு போன்றதுதான். பட்டப்பகலில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் கொள்ளையை போல் நடந்துள்ளது.

டாடா நிறுவனம் ரூ.15 ஆயிரத்து 300 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும், அது மறுசீரமைக்கப்பட்டு விடும். மீதி ரூ.2 ஆயிரத்து 700 கோடியை மட்டுமே மத்திய அரசுக்கு கொடுக்கும்.

ஏர் இந்தியாவின் மீதி கடன் ரூ.46 ஆயிரத்து 262 கோடியை மத்திய அரசுதான் ஏற்க வேண்டி இருக்கும். அதாவது, பொதுமக்கள் தலையில்தான் அந்த கடன் சுமத்தப்படும். அதே சமயத்தில், ஏர் இந்தியா வாங்கிய சொத்துகள், டாடா நிறுவனத்துக்கு சொந்தமாகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.