தேசிய செய்திகள்

பிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: தங்கக்கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார் + "||" + The 5th day of the Prom Malayappasamy got up in the karuda vaganam

பிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: தங்கக்கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார்

பிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: தங்கக்கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
திருமலை, 

பிரம்மோற்சவ விழாவின் 5-வதுநாளான நேற்று காலை உற்சவர் மலையப்பசாமி பல்லக்கில் மோகினி அலங்காரத்திலும், இரவு தங்கக் கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில், உற்சவர் மலையப்பசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் அருகில் தங்கத்திருச்சி வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உற்சவர்கள் இருவரும் வாகன மண்டபத்தில் இருந்து முதலில் கோவிலில் உள்ள ெரங்கநாயகர் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து உற்சவர்கள் இருவரும் ஊர்வலமாக கல்யாண உற்சவ மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வாகனச் சேவையில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பாதுகாப்புத்துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் கருட சேவை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.