தேசிய செய்திகள்

லகிம்பூர் வன்முறை விவகாரம் மத்திய மந்திரியை நீக்காமல் நீதியை தடுக்கிறது, பா.ஜனதா ராகுல்காந்தி குற்றச்சாட்டு + "||" + BJP obstructing justice by not sacking minister: Rahul Gandhi on Lakhimpur case

லகிம்பூர் வன்முறை விவகாரம் மத்திய மந்திரியை நீக்காமல் நீதியை தடுக்கிறது, பா.ஜனதா ராகுல்காந்தி குற்றச்சாட்டு

லகிம்பூர் வன்முறை விவகாரம் மத்திய மந்திரியை நீக்காமல் நீதியை தடுக்கிறது, பா.ஜனதா ராகுல்காந்தி குற்றச்சாட்டு
லகிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக்கோரி, காங்கிரஸ் கட்சி மவுன போராட்டம் நடத்தியது.
புதுடெல்லி, 

லகிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக்கோரி, காங்கிரஸ் கட்சி நேற்று மவுன போராட்டம் நடத்தியது.

இந்தநிலையில், இப்பிரச்சினை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய மந்திரியை பதவிநீக்கம் செய்யாததன் மூலம் நீதி வழங்கும் நடைமுறையை பா.ஜனதா தடுக்கிறது. லகிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகள் பற்றியும் மத்திய அரசு கவலைப்படவில்லை, பா.ஜனதா தொண்டர்கள் பற்றியும் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.