தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கோஷ்டி மோதலில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி; 5 பேர் காயம் + "||" + Trinamool Congress faction fires on clash 2 killed; 5 people were injured

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கோஷ்டி மோதலில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி; 5 பேர் காயம்

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கோஷ்டி மோதலில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி; 5 பேர் காயம்
மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் தொகுதிக்கு வருகிற 30-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் தொகுதிக்கு வருகிற 30-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அங்கு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கூச் பெஹார் தொகுதிக்கு உட்பட்ட தின்ஹட்டா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருபிரிவினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

இந்த மோதல் பின்னர் கைகலப்பாக மாறியதை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.

இதில் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.