உலக செய்திகள்

சீனாவில் கன மழை: 51 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பஸ் + "||" + China floods: At least three people killed as bus falls into river with 'over a million' displaced by heavy rain

சீனாவில் கன மழை: 51 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பஸ்

சீனாவில் கன மழை: 51 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பஸ்
வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிஜீங்,

வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். 37 பேரை மீட்புப் படையினா் மீட்டனா். 12 பேரை காணவில்லை.

அண்டை மாகாணமான சாங்ஷியில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியிலிருந்து 1.20 லட்சம்  பேர் மீட்கப்பட்டனா். 1.90 லட்சம் ஹெக்டோ பயிா்கள் மழையால் சேதமடைந்துள்ளன.

இந்த மாகாணத்தில் உள்ள பிங்யாவோ நகரத்தில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சுவா் உள்ளது. மழையால் அதில் 25 மீட்டா் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.