தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில்பயணிகள் ரெயில் வருவாய் 113 சதவீதம் அதிகரிப்பு + "||" + Passenger rail revenue increased by 113 percentage

நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில்பயணிகள் ரெயில் வருவாய் 113 சதவீதம் அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில்பயணிகள் ரெயில் வருவாய் 113 சதவீதம் அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் பயணிகள் ரெயில் வருவாய் 113 சதவீதம் அதிகரிப்பு
புதுடெல்லி, 

கொரோனா காரணமாக முடங்கிய ரெயில் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் 96 சதவீத ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 

அவை பெரும்பாலும் சிறப்பு ரெயிலாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரெயில் பயணிகள் கட்டணம் மூலமான வருவாய் குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரெயில்வேக்கு கடிதம் எழுதியிருந்தார். 

அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), முதல் காலாண்டை விட 113 சதவீதம் அதிகமான வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

முதல் காலாண்டில் ரூ.4,921 கோடி வருவாய் கிடைத்த நிலையில், 2-வது காலாண்டில் ரூ.10,513 கோடி வருவாய் பயணிகள் கட்டணம் மூலம் கிடைத்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.