தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிவாரணத் தொகையாக ரூ.9,871 கோடி விடுவிப்பு + "||" + Finance Ministry releases Rs 9,871 crore grant to 17 states

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிவாரணத் தொகையாக ரூ.9,871 கோடி விடுவிப்பு

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிவாரணத் தொகையாக ரூ.9,871 கோடி விடுவிப்பு
2021-22-ம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு இத்தொகையை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
புதுடெல்லி,

வருவாய் பகிர்வுக்கு பின்பு மாநிலங்களின் வருவாய் இடைவெளியை சரிசெய்யும்விதமாக மத்திய அரசு மாதந்தோறும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று 15-வது நிதி கமிஷன் பரிந்துரைத்தது. 2021-22-ம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு இத்தொகையை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிவாரண தொகையை பெறுவதற்கான மாநிலங்களின் தகுதியும், அவை ஒவ்வொன்றுக்கான தொகை அளவும் நிதி கமிஷனால் முடிவு செய்யப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டுக்கான பகிர்வு தொகை மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, மாநிலம் ஒவ்வொன்றின் வருவாய், செலவு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றுக்கான நிவாரண தொகை தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை நிவாரண தொகையின் 7-வது மாதாந்திர தவணையாக ரூ.9,871 கோடி செலவினத் துறையால் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொகையுடன், தகுதியுள்ள மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் மொத்தமாக ரூ.69 ஆயிரத்து 97 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடி நிவாரணத் தொகை வழங்க 15-வது நிதி கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. அதில் இதுவரை வழங்கப்பட்டுள்ள ரூ.69 ஆயிரத்து 97 கோடி, மொத்த தொகையில் 58.33 சதவீதம் ஆகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.