உலக செய்திகள்

லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகள்; 16 உடல்கள் மீட்பு + "||" + 2 boats off the Libyan coast; 16 bodies recovered

லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகள்; 16 உடல்கள் மீட்பு

லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகள்; 16 உடல்கள் மீட்பு
லிபியா நாட்டின் கடற்கரையோரம் கரை ஒதுங்கிய படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

திரிபோலி,

ஐ.நா.வுக்கான அகதிகள் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், திரிபோலி கப்பல் படை தளத்திற்கு வந்த 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, உயிர்பிழைத்த 187 பேரை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன.  சிலருக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட நிலையில் அவை வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

நடப்பு ஆண்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26,314 சட்டவிரோத அகதிகள் மீட்கப்பட்டு, லிபியா நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.  474 பேர் உயிரிழந்து உள்ளனர்.  689 பேரை காணவில்லை.  இந்த நிலையில், லிபிய கடற்கரையில் 16 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பூட்டிய வீட்டுக்குள் மீன்வளத்துறை அதிகாரி எரிந்த நிலையில் பிணமாக மீட்பு
பூட்டிய வீட்டுக்குள், மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பொன்னேரி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரூ.250 கோடி சொத்து மீட்கப்பட்டது. இந்த இடம் அமைந்துள்ள கட்டிடத்துக்கு அமைச்சர் சேகர்பாபு ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.
3. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு
தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். உதவுவது போல நடித்து கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
4. எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு
எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு.
5. அசாமில் படகு விபத்தில் 3 பேர் பலி; 89 பேர் மீட்பு
அசாமில் படகு விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 89 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.