தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு + "||" + Earthquake in Karnataka: 3.6 on the Richter scale

கர்நாடகாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு

கர்நாடகாவில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 3.6 ஆக பதிவு
கர்நாடகாவின் குல்பர்காவில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
கலபுரகி,

கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் இன்று காலை 8.06 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

கடந்த ஞாயிற்று கிழமை கர்நாடகாவின் குல்பர்கா நகரில் காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி இருந்தது.  இதனால், கடந்த 2 நாட்களில் கர்நாடகாவின் குல்பர்காவில் 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கிரீசில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு
கிரீசில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. ஈரானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
ஈரானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு
டெல்லியில் இதுவரை மொத்தம் 480 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.