தேசிய செய்திகள்

காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை + "||" + NIA raids 16 locations in Kashmir Officers rechecked

காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை

காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு,


காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த வாரத்தில் பள்ளியொன்றில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என 2 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று, கடந்த செவ்வாய் கிழமை 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் பள்ளி மீது தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இதனால், காஷ்மீரில் வசித்து வரும் காஷ்மீர் பண்டிட்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஸ்ரீநகர், அனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட 16 இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் சோதனை நடத்தினர்.  இதேபோன்று 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  கல் வீச்சில் ஈடுபடுவோர், சமூக விரோதிகள் என கடந்த வாரத்தில் 570 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் புதிய வழக்கு ஒன்றில், காஷ்மீரின் 16 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  இதேபோன்று முந்திரா போதை பொருள் பறிமுதல் வழக்கில் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் வேன் மீது லாரி மோதல்; 25 பேர் காயம்
திருச்சியில் வேன் மீது லாரி மோதியதில் 25 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
2. காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை; 70 இளைஞர்கள் கைது
காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய சோதனையில் 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
4. சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
5. அறந்தாங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் சிக்கியது
அறந்தாங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடந்தது.