தேசிய செய்திகள்

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது; தாக்குதல் நடத்த சதியா?... + "||" + Pakistani terrorist arrested in Delhi; Conspiracy to attack? ...

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது; தாக்குதல் நடத்த சதியா?...

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது; தாக்குதல் நடத்த சதியா?...
டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்து, ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள சூழலில், இதனை முன்னிட்டு டெல்லியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என டெல்லி போலீசார் உளவு தகவல் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து டெல்லி காவல் ஆணையாளர் ராகேஷ் ஆஸ்தானா தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.  அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, உள்ளூர் குற்றவாளிகள், கும்பல்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களின் உதவியின்றி அவர்களால் தாக்குதல் நடத்த முடியாது என கூறினார்.

இதேபோன்று ரசாயன பொருள் விற்பனை கடை, வாகன நிறுத்தங்கள், பழைய பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கார் டீலர்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுவதுடன், கண்காணிக்கப்படவும் கூடும்.  பெட்ரோல் பம்புகள் உள்ளிட்டவை தாக்குதலுக்கான இலக்காக கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.

இதனால், வாடகைக்கு இருப்போர், பணியாளர்களை சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் லெட்சுமி நகர் பகுதியில் ரமேஷ் பூங்கா என்ற இடத்தில் வசித்து வந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர் பாகிஸ்தானிய பயங்கரவாதி என்பதும், இந்திய குடிமகன் என போலியான அடையாள அட்டையுடன் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

அந்நபரிடம் இருந்து, 60 ரவுண்டுகள் கொண்ட தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.-47 ரக துப்பாக்கி ஒன்று, கையெறி குண்டு ஒன்று, 60 ரவுண்டுகள் கொண்ட தோட்டாக்களுடன் கூடிய 2 பிஸ்டல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அந்த நபர் முகமது அஷ்ரப் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.  அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.  அவர் வசித்து வரும் லெட்சுமி நகர் பகுதியில் ரமேஷ் பூங்கா என்ற இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, வெடிபொருள் சட்டம், ஆயுத சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  பண்டிகை காலங்களை முன்னிட்டு டெல்லியில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் சாலை விபத்து: ஒருவர் உயிரிழப்பு
டெல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.
2. சீனாவில் ரசாயன ஆலை வெடிவிபத்து; 4 பேர் பலி
சீனாவில் ஏற்பட்ட ரசாயன ஆலை வெடிவிபத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
3. “விசாரணையை தாமதப்படுத்த முயற்சி” - சிறப்பு டி.ஜி.பி மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகாரில் விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்வதாக சிறப்பு டி.ஜி.பி மீது தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
4. காஷ்மீரின் ஸ்ரீநகரில் என்கவுண்ட்டர் தொடங்கியது
காஷ்மீரின் ஸ்ரீநகரில் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
5. பெரு நாட்டில் சாலை விபத்து; 8 பேர் உயிரிழப்பு
பெரு நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.