மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாயமான சாவி... வாக்குப் பெட்டி உடைப்பு + "||" + Rural local elections: The magic key ... ballot box breaking

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாயமான சாவி... வாக்குப் பெட்டி உடைப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாயமான சாவி...  வாக்குப் பெட்டி உடைப்பு
பரமக்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு பெட்டியின் சாவி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

மேலும் 1381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 5 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

* திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்தது. இதனால் சுத்தியல் மூலம் வாக்குப்பெட்டியின் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

* பரமக்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு பெட்டியின் சாவி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளால் சுத்தியல் மூலம் வாக்கு பெட்டி உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

*  மரக்காணம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினருக்கும், முகவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் கைகலப்பில் முடிந்தது. இதனால் வாக்கு எண்ணும் பணி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

* ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் மையமான அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அலுவலர்களுக்கு காலை உணவு வழங்கவில்லை. இதனால் அலுவலர்கள் சோர்வடைந்ததால் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர்.  வாக்கு எண்ணும் பணி 9.15 மணி வரை துவக்கப்படாமல் இருந்தனர். 10.30 மணி வரையிலும் அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. இதனால் அறைகளை விட்டு வாக்கு எண்ணும் அலுவலர்கள் வெளியே வந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல்: 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றியது தி.மு.க
மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
2. உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி - எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி
நெல்லை மாவட்டத்தில் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தல் தி.மு.க வரலாற்று வெற்றி; 9 மாவட்ட முன்னிலை விவரங்கள்
வேலூரில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
4. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்றுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.