மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 1:00 மணி முன்னிலை நிலவரம் + "||" + 9 District Rural Local Elections: 1:00 pm Leading Status

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 1:00 மணி முன்னிலை நிலவரம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்:  1:00 மணி முன்னிலை நிலவரம்
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஊராட்சி தலைவராகிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர்
சென்னை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் - 35 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன.

மேலும் 1381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 16 இடங்களில் வெற்றி;  அதிமுக 1, காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

முன்னிலை விவரம்

திமுக - 75

அதிமுக - 11

பாமக - 2

அமமுக - 1

பிற - 5  

9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இதுவரை 159 பேர் தேர்வு பெற்று உள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,428 பேர் தேர்வு பெற்று உள்ளனர்.

* தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற வரும் வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது.

* தென்காசி ஊராட்சி ஒன்றியம் தேன்பொத்தை ஒன்றிய கவுன்சிலர் கலாநிதி திமுக 2294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜெயா 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் பதிவான வாக்குகள் : 3,472
செல்லாதவை : 52.
ஜெயா (தி.மு.க.)  - 1,918
தீபா (அ.தி.மு.க.) - 1,442
வீரக்காள்  (அ.ம.மு.க.) - 48
நாச்சியம்மாள் (நாம் தமிழர்) - 12

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ராமசுப்ரமணியன் வழங்கினார்.

* தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டில் மதிமுக வேட்பாளர்  சங்கீதா வெற்றி பெற்றுள்ளார

மொத்த வாக்கு - 3457
சங்கீதா,ம.தி.மு.க. - 2419
சீதாலெட்சுமி,பா.ஜ.க. - 1065
வித்தியாசம் - 1354

மதிமுக வேட்பாளர் சங்கீதா 1354 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

* திருவண்ணாமலை ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்ராபாளையம் கிராமத்தில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர் இடை தேர்தலில்,   திமுக வேட்பாளர் தாட்சாயிணி அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் தாட்சாயிணி அன்பழகன் - 1608,  பா.ம.க.வேட்பாளர் ஜெயேந்திரன் - 795

813 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க.வை சேர்ந்த தாட்சாயிணி அன்பழகன்  வெற்றி பெற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் 2வது வார்டில் சண்முகம், 3வது வார்டில் தமிழரசி சாமிநாதன் ஆகிய திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

* நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  ஒன்றியம் 7வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராமலட்சுமி வெற்றி பெற்று உள்ளார்.

* நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் 2வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல்: 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றியது தி.மு.க
மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
2. உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி - எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி
நெல்லை மாவட்டத்தில் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தல் தி.மு.க வரலாற்று வெற்றி; 9 மாவட்ட முன்னிலை விவரங்கள்
வேலூரில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
4. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்றுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.