உலக செய்திகள்

சீனாவில் புயல் மழை, வெள்ளம்: 15 பேர் பலி; 3 பேர் மாயம் + "||" + Rainstorms in China: 15 killed; 3 people missed

சீனாவில் புயல் மழை, வெள்ளம்: 15 பேர் பலி; 3 பேர் மாயம்

சீனாவில் புயல் மழை, வெள்ளம்:  15 பேர் பலி; 3 பேர் மாயம்
சீனாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.
டையூவான்,

சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கே ஷாங்சி மாகாணத்தில் கடந்த 2ந்தேதி முதல் 7ந்தேதி வரையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

இதனால், மாகாணத்தின் 76 கவுன்டி பகுதிகள் பாதிக்கப்பட்டன.  17.6 லட்சம் பேர் மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  1 லட்சத்து 20 ஆயிரத்து 100 பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த மழையால் 37 ஆயிரத்து 700 வீடுகள் கடுமையாக சேதமடைந்து உள்ளன.  2.38 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்தன.  இதனால், 78 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் தொடர்ச்சியான மழை பொழிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.  3 பேர் காணாமல் போயுள்ளனர் என மாகாண அரசு தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்தில் கனமழை; வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.