தேசிய செய்திகள்

டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு + "||" + Over 100 dengue cases reported in Delhi so far in October: Report

டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
டெல்லியில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில்  அக்டோபர் மாதத்தில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  

பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த செப்டம்பரில் 217 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபரில் கடந்த 10 நாள்களில் மட்டும் 139 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நடப்பு ஆண்டில் மொத்த பாதிப்பு 480 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இங்கு டெங்குவினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. வருமான வரி சோதனைக்கு பயந்து மந்திரிகள் டெல்லியில் முகாம் - டி.கே.சிவக்குமார் கடும் தாக்கு
முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரியிடம் விசாரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால், வருமான வரி சோதனைக்கு பயந்து மந்திரிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
2. டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்
டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
4. குடும்பத்துடன் முக்கிய விழாக்களை கொண்டாட டெல்லி காவல்துறையினருக்கு விடுமுறை...
காவல்துறையினர் தங்களது குடும்பத்தினருடன் முக்கிய விழாக்களை கொண்டாடுவதற்கு விடுமுறை வழங்கப்படும் என டெல்லி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
5. சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !
டெல்லியில் சமையல் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி ஆகினர்.