தேசிய செய்திகள்

திரையரங்குகளை மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவு + "||" + Cinema Halls to Reopen in Maharashtra With 50 Percent Capacity from October 22

திரையரங்குகளை மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவு

திரையரங்குகளை மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவு
அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன்மீண்டும் திறக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளது.
மராட்டியம்,

இந்தியாவில் கொரோனாவானது அனைத்து துறைகளையும் முடக்கிப்போட்ட நிலையில் சினிமா மற்றும் திரையரங்குகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில், திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்தவர்களால் கடந்த மாதம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 22 முதல்  சினிமா திரையரங்குகளை மீண்டும் திறக்க மகாராஷ்டிரா அரசு இன்று நடைமுறைகளை வெளியிட்டது. 

அதன்படி திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். மேலும் பார்வையாளர்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஆக குறைந்தது
மராட்டியத்தில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. முதியோர் இல்லத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!
மராட்டியத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியம்: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி டிரக் மோதல் - 4 பேர் பலி
மராட்டியத்தில் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மினி டிரக் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
4. மராட்டியத்தில் மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைக்கும்: மத்திய மந்திரி கருத்தால் பரபரப்பு
வரும் மார்ச் மாதத்திற்குள் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி நாரயண் ரானே தெரிவித்துள்ளார்.
5. பதிவெண் இல்லா காரில் பயணம் செய்த ஓவைசி - டிரைவருக்கு அபராதம்
பதிவெண் இல்லாத காரில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி பயணம் செய்துள்ளார்.