மாநில செய்திகள்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை + "||" + NIA raids premises of suspected Maoist supporters in Tamil Nadu

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் அம்பத்தூர், நெற்குன்றம், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள மாவோயிட்டு ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதியில் சிங்காரம் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 2 அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் புளியக்குளம் பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர் தினேஷ், டேனிஸ் அங்கலங்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷ் ஆகியோரது வீடுகளில் ஏதேனும் தடையங்கள் உள்ளதா? என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த அண்ணாநகர், பண்ணைபுரம் ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேல்முருகன், ஈஸ்வரன், முத்துச்செல்வம், பழனிவேல் ஆகிய 4 பேரின் வீடுகளில் சுமார் 2 மணி நேரம் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

1. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்: தமிழக-கர்நாடக எல்லையில் சோதனைசாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஈரோடு மாவட்ட வனப்பகுதி போலீஸ்நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தமிழக-கர்நாக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.