தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்க தேவையில்லை - மூத்த ராணுவ அதிகாரி + "||" + No need for more troops or lessening their numbers at LoC: Army officer

காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்க தேவையில்லை - மூத்த ராணுவ அதிகாரி

காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்க தேவையில்லை - மூத்த ராணுவ அதிகாரி
காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்க தேவையில்லை என்று மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
 
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிகள் நடைபெறலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்கவோ? குறைக்கவோ?தேவையில்லை என்று மூத்த ராணுவ அதிகாரி டிபி பாண்டே தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் விழிப்புடன் உள்ளது. காஷ்மீருக்குள் எந்த வித ஊடுருவலையும் இந்திய ராணுவம் அனுமதிக்காது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் கைது
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
2. காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
3. காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
4. காஷ்மீரில் பொதுமக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் - பிரியங்கா காந்தி
காஷ்மீரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
5. காஷ்மீர்: 2 ஆசிரியர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் பள்ளிக்கூடத்திற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள் அங்கு இருந்த ஆசிரியர்கள் 2 பேரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச்சென்றனர்.