மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 மணி நிலவரம்: 9 மாவட்ட ஊராட்சிகளிலும் தி.மு.க.வே முன்னிலை + "||" + Tamil Nadu rural local body election results live updates: DMK leads

ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 மணி நிலவரம்: 9 மாவட்ட ஊராட்சிகளிலும் தி.மு.க.வே முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 மணி நிலவரம்: 9 மாவட்ட ஊராட்சிகளிலும் தி.மு.க.வே முன்னிலை
140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 75 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 4 இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
சென்னை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மாலை  5 மணி வரை வெளியான முடிவுகளின் படி 9 மாவட்ட ஊராட்சிகளையும் தி.மு.கவே கைப்பற்றுகிறது.74 ஊராட்சி ஒன்றியங்களையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதனிடையே 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கிறது.

* 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 75 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 4 இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

*1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 213 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது . 25 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது


தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல்: 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றியது தி.மு.க
மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
2. உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி - எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி
நெல்லை மாவட்டத்தில் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தல் தி.மு.க வரலாற்று வெற்றி; 9 மாவட்ட முன்னிலை விவரங்கள்
வேலூரில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
4. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்றுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.